|
பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம் (Balaji Institute of Computer Graphics) – கோயம்புத்தூரில் நடத்திவரும் பயிற்சி பள்ளி மூலம் நூற்றுக்கணக்கான கணினி வரைகலைஞர்களை உருவாக்கி வருகிறது. தமிழ்நாட்டிலேயே முழுமையாக, தனிப்பட்ட முறையில் கணினி வரைகலைக்காகவே, துறைசார்ந்த பட்டறிவுடன், அச்சு, புகைப்படம், விளம்பரம், பதாகை வடிவமைப்பு மற்றும் புத்தகப் பதிப்பு ஆகிய துறைகளுக்கான, துறைசார்ந்த செய்திகளுடன் பயிற்சி வழங்கப்படும் ஒரே பயிலகம் என்ற சிறப்புடன், அனைத்து பயிற்சிகளும் தமிழ் வழியாக மட்டுமே நடத்தப்படுவதுடன், தமிழில் விரிவாக எழுதப்பட்ட, அச்சிட்ட புத்தகங்கள் கொடுக்கப்படுவதும் இந்தப் பயிலகத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாகும்.
இதன் நிர்வாகி திரு. ஜெ. வீரநாதன் 1976 முதல் அச்சுத்துறையில் செயல்பட்டு வருகின்றார். 1988 முதல் கணினியை பயன்படுத்தி வடிவமைப்பு செய்யும் பணியையும், 1994 முதல் கணினி வரைகலைக்கான பயிற்சியளிப்பையும் தொடர்ந்து வருகிறார். 19.04.2014ம் தேதி துவங்கப்பட்ட இந்தப் பயிலகம் மூலம் தற்போது கணினி வரைகலைப் பகுதியில் பயன்படுத்தப்படும் பேஜ்மேக்கர், இன்டிசைன், இல்லஸ்ட்ரேட்டர், போட்டோஷாப், கோரல்டிரா, பிரீமியர், இங்க்ஸ்கேப், ஜிம்ப், எம்.எஸ்.ஆபீஸ், சின்ஃபிக் ஸ்டூடியோ மற்றும் கேன்வா ஆகிய மென்பொருட்களில் செயல்முறையாக பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். குறிப்பாக தற்போது எங்களது பயிலகத்திற்கென்றே உருவாக்கப்பட்ட காணெளி காட்சிகள் மூலம் முழுமையான விளக்கத்துடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் பயிற்சிக்கு வருபவர்களின் எல்லாவிதமான ஐயப்பாடுகளும், எந்தவிதமான தயக்கமும் இன்றி தெளிவுபடுத்தப்படுகின்றன.
கற்பனைவளம் என்பதன் அடிப்படையில் செயல்படும் இந்தக் கணினி வரைகலைப் பகுதிக்குள் வருவதற்கு கல்வித் தகுதி மற்றும் வயது ஆகியன தடையாக இருப்பதில்லை. கணினிப் பயிற்சி, கடினமான செயல்பாடுகள் போன்ற எவையும் தேவையில்லை. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், ஆங்கிலத் தட்டச்சில் குறைந்தபட்ச வேகமும் இருந்தால் போதும். நமது பயிலகத்திற்கு வருகின்ற ஒவ்வொருவருக்கும், அவரவர் தகுதிக்கு ஏற்றபடியாக தனி கவனம் செலுத்தப்பட்டு கணினியின் அடிப்படையிலிருந்து துவங்கி, முழுமையான விவரங்களுடன் பயிற்சி தரப்படுகிறது.
தற்போது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பயிற்சி வகுப்புகள் இணையம் வழியாக மட்டுமே நடத்தப்படுகின்றன. ஆம், கடந்த 2019, கொரோனா ஊரடங்கிற்கு முன்பிருந்தே இணையம் வழியான பயிற்சி வகுப்புகளைத் துவக்கி நடத்தி வருகிறார். இதனால் அலைச்சல், நேர சேமிப்பு மற்றும் கட்டண சேமிப்பு ஆகியன பங்கு பெறுபவர்களுக்குப் பலனாகக் கிடைக்கின்றன.
ஒவ்வொரு மென்பொருளுக்கும் - குறைந்தது, 6 மணி நேரம் முதல் 13 மணி நேரம் வரையிலும், மென்பொருளின் தன்மைக்கு ஏற்றாற்போல இணையம் வழியாக, தினசரி 1 மணி நேரம் முதல் என்ற வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது.
கணினி வரைகலைப் பயிற்சி மட்டுமல்லாமல் இந்தத் துறையில் பயன்படுத்தப்படுவன மட்டுமல்லாது, பெருமளவில் பயன்படுத்தப்படும் மென்பொருட்களுக்கும் முழுமையான விளக்கத்துடன் தமிழில் விரிவான புத்தகங்களை எழுதி வெளியிட்டு வருகின்றோம்.
அந்த வகையில் பேஜ்மேக்கர் 7.0, இன்டிசைன் சிஎஸ்4, இல்லஸ்ட்ரேட்டர் சிசி, போட்டோஷாப் சிஎஸ்4, கோரல்டிரா எக்ஸ்5, அடோபி பிரீமியர், எம்எஸ் ஆபீஸ் ஆகிய தலைப்புகளில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை மட்டுமல்லாது, இந்திய மொழிகளிலேயே முதல் முறையாக, தமிழ் மொழியில் ஜிம்ப் 2.8 மற்றும் இங்க்ஸ்கேப் என்ற இரண்டு கட்டற்ற (ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன்ஸ்) மென்பொருட்களுக்கும் முழுமையான புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாது, கணினித் துறை சார்ந்த செய்திகள் அடங்கிய இணையத்தை அறிவோம், கணினியின் அடிப்படை, கணினி பராமரிப்பு என்ற புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. புத்தகம் என்பதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள “புத்தகம் பற்றிய புத்தகம்” என்ற புதிய நூல் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. (புத்தகங்களின் முழுமையான விவரங்களை இந்த வலைதளத்தின் பிரிதொரு பகுதியில் காண்க)
நமது பயிலகம் மூலம் எழுதி வெளியிடப்பட்டுள்ள சித்திரமும் மவுஸ் பழக்கம் (கோரல்டிரா எக்ஸ்2) (2005) மற்றும் கணினியின் அடிப்படை (2013) ஆகிய இரண்டு புத்தகங்களுக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த அறிவியல் நூல் பரிசுகள் கிடைத்துள்ளன. இவை தவிர தமது புத்தகங்களுக்காக, நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டைள, சென்னை பவித்ரம் அறக்கட்டளை மற்றும் இராஜபாளையம் மணிமேகலை மன்றம் ஆகியோர் வழங்கிய சிறந்த அறிவியல் நூல்களுக்கான முதல் பரிசுகளையும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாது, நெய்வேலி புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது, கோவை ஜெய்வர்மம் அறக்கட்டளை வழங்கிய சிறந்த தொழில்நுட்ப எழுத்தாளர் விருது ஆகியவற்றுடன், கவிப்பேரரசு கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களால் கணினிக் கம்பன் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
கணினி வரைகலைப் பகுதிக்காக 2010 முதல் சங்கமம் என்ற மின்னிதழை நடத்தி வரப்பட்டது. விலையில்லாமல் மின்னஞ்சல் வழியே அனுப்பப்பட்டுவந்த இதனைப் பெற விரும்புவோர், டெலிகிராம் செயலி வழியாக நம்மைத் தொடர்பு கொண்டால், மேகக் கணினி வழியாக 164 இதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளத் தேவையான இணைப்பை அனுப்பி வைக்கிறோம்.
இவை தவிர தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்ற அச்சகதாரர் சங்கங்கள், புகைப்பட கலைஞர்கள் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மூலமாக கணினி வரைகலைப் பகுதிக்கான பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலகங்கள் போன்றவையும் நடத்தப்பட்டு வருகின்றன. திரு. ஜெ. வீரநாதன் அவர்களைப் பற்றிய மேலதிகத் தகவல்கள், நமது வெளியீடுகள், பெற்றுள்ள பரிசுகள் போன்றவற்றை இந்த வலைதளத்தில் OUR BOOK என்ற பகுதியில் உள்ள Bio-Data of JVN என்ற தலைப்பின்கீழ் காணலாம்.
|
|
|
|