Home
About Us
Our Books
Sangamam
Contact Us

தமிழ் தட்டச்சுப் பயிற்சி
Price : Rs.1500.00
புத்தகப் பதிப்பாளர்கள் ! அச்சுத் துறையினர் ! எழுத்தாளர்கள் ! கணினி வரைகலைஞர்கள் ! விருப்பம் உள்ள எவரும்! பழகி, பயன்படுத்தி பலன்பெற..... கணினியில் எளிமையாக தமிழ் தட்டச்சு செய்ய, பயிற்சி வகுப்பு ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சி தமிழ் தட்டச்சுப் பயிற்சி (இன்ஸ்க்ரிப்ட் முறை) ஒருங்குறி எழுத்துக்களை கையாளுதல் எந்த இந்திய மொழியையும் தட்டச்சு செய்தல் ஒலி(பேச்சு)யை எழுத்தாக்குதல் அச்சிட்டதை எழுத்தாக்குதல் எழுதியதை எழுத்தாக்குதல் மொழி மாற்றுதல் புத்தக வேலைகளை எளிதாக வடிவமைத்தல் (இன்டிசைன் அறிமுகம்) 1. ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சி - கணினிக்கான விசைப்பலகை ஆங்கிலத்தில்தான் உள்ளது. எனவே அதில் தட்டச்சுப் பயிற்சி கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். எளிமையாக, மிகக் குறுகிய காலத்தில் ஆங்கிலத் தட்டச்சுப் பயிற்சி செய்து பழகுவதற்கான மென்பொருள் வழங்கப்படும். அதைக் கையாளும் முறை சொல்லிக் கொடுக்கப்படும். 2. தமிழ் தட்டச்சுப் பயிற்சி (இன்ஸ்க்ரிப்ட் முறை) - இந்திய ஒன்றிய அரசு உருவாக்கியுள்ள எளிமையான விசைப்பலகை அமைப்பு. தற்போதைய ஒருங்குறி அமைப்பு இந்த வகையிலும் செயல்படுகிறது. தமிழ் தட்டச்சு செய்யப் பழகிவிட்டால், எந்த ஒரு இந்திய மொழியையும் எளிதாகத் தட்டச்சு செய்யலாம். 3. ஒருங்குறி (யுனிக்கோட்) எழுத்துக்களை கையாளுதல் - தற்போது எந்தவொரு கணினியிலும் தமிழைத் தட்டச்சு செய்வதற்கு உதவும் ஒருங்குறி என்பதை அறிந்து கொள்ளுதல், கணினியில் நிறுவுதல், பயன்படுத்துதல், பலன் பெறுதல் - உள்ளிட்டவை முழுமையாக விளக்கப்படும். 4. எந்தவொரு இந்திய மொழியையும் தட்டச்சு செய்தல் - இன்ஸ்க்ரிப்ட் முறையில் தமிழ் தட்டச்சு செய்யப்பழகிய பிறகு, உங்களால் எந்தவொரு இந்திய மொழியையும், அந்த மொழி தெரியாமலே, உச்சரிப்பு அடிப்படையில் தட்டச்சு செய்ய முடியும். இதனால் எந்த இந்திய மொழியிலும் உங்களால் எந்த வடிவமைப்பையும் உருவாக்க முடியும். 5. ஒலியை (பேச்சை) எழுத்தாக்குதல் - தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் கிடைத்திருக்கும் ஸ்பீச் டூ டெக்ஸ் (Speech to Text) என்பதை செயல்முறையாக விளக்கி பயிற்சி பெறச் செய்தல். 6. அச்சிட்டதை எழுத்தாக்குதல் - அச்சிட்ட நிலையில் கிடைக்கும் புத்தகத்தை அப்படியே, தட்டச்சு செய்யாமல் கணினிக்குள் எழுத்தாகப் பெறுதல். (எந்தவொரு மொழியாக இருந்தாலும்) 7. எழுதியதை எழுத்தாக்குதல் (நிபந்தனைகளுக்குட்பட்டு) - அச்சிட்டதைப் போலவே, எழுதிய நிலையில் கிடைப்பனவற்றையும் கணினிக்குள் எழுத்தாக்கும் வழிமுறையை பயிற்சி செய்தல். 8. மொழி மாற்றுதல் (Google Translation) - ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றம் செய்தல். ட்ரான்ஸ்லேஷன் செய்து பழகுதல். மற்றும் மொழிமாற்றம் செய்த பிறகு சரிசெய்தல். செயல்முறையாகப் பயிற்சிக் கொடுத்தல். 9. புத்தக வேலைகளை எளிதாக வடிவமைத்தல் (இன்டிசைன் அறிமுகம்) - அச்சுத்துறைக்காகவே பலதரப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளதாகவும், விஸிட்டிங் கார்டு முதல் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வரை எளிதாக உருவாக்க உதவுவதும், குறிப்பாக புத்தக வேலைகளை மிக மிக எளிதாக பிழைகள் ஏதும் இல்லாமல் வடிவமைக்க உதவும் இன்டிசைன் (InDesign) பற்றிய அறிமுகம் தரப்படுகிறது. நாள் - 13.05.2024 முதல் 17.05.2024 வரை ஐந்து நாட்கள் - நேரம் - தினசரி காலை 11 மணி முதல் 60 முதல் 120 நிமிடங்கள் வரை நீடிக்கலாம். - கட்டணம் - ரூ. 1500 மட்டுமே 07.05.2024க்குள் செலுத்தினால் ரூ. 900 மட்டுமே - கட்டணம் செலுத்திய விவரத்தை டெலிகிராம் செயலி வழியாக 99444-13782 என்ற எண்ணிற்குத் தனியாக அனுப்பி வைக்க வேண்டும். இந்தப் பயிற்சிக்காக உருவாக்கப்படும் டெலிகிராம் குழுவில் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். அதன் வழியாக மட்டுமே உங்களுக்குப் பல்வேறு தகவல்கள், செயலிகள், வலைதள முகவரிகள் உள்ளிட்டவை பகிரப்படும். - நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு - Balaji Institute of Computer Graphics, Trichy இணையம் வழியாக நடத்தப்படும் 144வது நிகழ்ச்சி பயிற்சி அளிப்பவர் - ஜெ. வீரநாதன் உங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே புதியனவற்றைக் கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு! நீங்களும், உங்கள் ஊழியர்களும்கூட பயிற்சி பெறத்தகுந்த நேரத்தில் Reveal the Secretes! Update Yourself!! Less Effort! More Production!! மேலும் விவரங்களுக்கு - ஜெ. வீரநாதன் பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், திருச்சி 99444-13782 ஜி-பே எண் - 98422-13782 balaji icg *நிகழ்ச்சிக்கான நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுக்குக் காண்க : https://balajiicg.blogspot.com/

Details.pdf
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------